;
Athirady Tamil News

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)

0

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு , பௌத்த பிக்கு ஒருவர் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

பௌத்த பிக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதிலும் , போராட்டக்காரர்களால் பௌத்த பிக்கு போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்.

ஜனாதிபதியை பதவி விலக கோரி கடந்த 09 நாட்களாக கொழும்பு காலி முகத்திடலில் , ஜனாதிபதி செயலகம் முன்பாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனது.

அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களால் தமிழ் தேசிய கீதம் பாடப்படுவதாக நிகழ்ச்சி நிரல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக தமிழ் தேசிய கீதத்தின் வரிகளை சிங்களத்தில் எழுதி சிங்களவர்களும் தமிழில் தேசிய கீதம் பாடுவதாக ஒழுங்கமைக்கப்பட்டது.

அதனடிப்படையில் தமிழ் தேசிய கீதம் பாடப்பட்டது. அதனை அடுத்து போராட்டக்காரர்களில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்விடத்திற்கு வந்த பௌத்த பிக்கு ஒருவர் , தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது தவறு. தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டிய தேவையில்லை என தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து , போராட்டக்காரர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

அவரை சமரசப்படுத்தி போராட்டக்காரர்கள் , அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.