;
Athirady Tamil News

’அரசியலில் ஸ்திரத்தன்மை உருவாகாவிடின் அராஜக நிலையை தவிர்க்க முடியாது’ !! (வீடியோ)

0

நாடு மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்களை கையாள முயற்சித்துக்கொண்டுள்ள நிலையில் நாட்டல் வன்முறைகளும் அராஜகத்தன்மையும் உருவாகின்றதென்றால் அதனை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் அவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவோ அல்லது மீளவோ முடியாது.

ஜனநாயக ரீதியில் அரசியல் அமைப்பிற்கு அமைய கூடிய விரைவில் அரசியல் ஸ்திரத்ததன்மையை உருவாக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் நாட்டு இன்னமும் மோசமான அராஜக நிலைக்கு செல்வதை தவிர்க்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியினால் நேற்று(11) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பொருளாதார ரீதியில் ஏற்கனவே நாடு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், கடந்த திங்கட்கிழமை நாட்டில் ஏற்பட்ட குழப்பக்கர நிலைமையானது வேறுவிதமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதுவரை காலமாக கடினமான முறையிலேனும் நாம் தக்கவைத்துக்கொண்டு பயணித்த தரத்தின் திசை மாறியுள்ளது. நாட்டின் சட்டம் ஒழுங்கை முறையாக கொண்டுசெல்ல முடியாத நிலைமையானது பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. வெவ்வேறு குழுக்கள் சட்டத்தை கையில் எடுப்பதும், சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய தரப்பு வேடிக்கை பார்ப்பதுவும் ஆரோக்கியமானதல்ல. அதுமட்டுமல்ல அவ்வாறான சூழல் நிலவும் எந்தவொரு நாட்டினாலும் அந்நாட்டின் பொருளாதாரத்தை சாதாரண நிலைமைக்கு கொண்டுவர முடியாது.

அதேபோல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசியல் ஸ்திரத்ததன்மை மிக அவசியமாகவும். நாம் பணிகளை ஆரம்பித்த நேரத்தில், குறுகிய காலப்பகுதிக்குள் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கும் அதன் மூலமாக குவிரைவாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றே நினைத்தோம். ஆனால் இன்று நிலைமையை பார்த்தால், நாட்டில் பிரதமர், நிதி அமைச்சர் இல்லாது, பாராளுமன்றம் முறையாக செயற்படாது வெறுமனே நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரை வைத்துக்கொண்டு நகரும் நிலைமையே காணப்படுகின்றது. சகல அரசியல்வாதிகளும் ஏதேனும் ஒரு விதத்தில் ஸ்திரமான அரசாங்கம் மற்றும் நிருவாக முறையை உருவாக்கி, நாட்டின் சட்டம் ஒழுங்கை உருவாக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதையே நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் பிரதான நிறுவனமாக எம்மால் வலியுறுத்த முடியும்.

நாடு மேலும் அராஜக நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்க மிக விரைவில் அரசியல் தீர்வொன்று அவசியம். நாட்டில் அராஜக நிலைமைகள் நிலவுகின்ற நிலையில் மத்திய வங்கி எவ்வாறான முயற்சிகளை கையாண்டாலும் அது வெற்றியளிக்காது. இப்போதும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, கடன் மீள் கட்டமைப்பு குறித்தும் பல்வேறு தரப்புடன் பேசிவருகின்றோம் .

இவற்றின் அடிப்படை தீர்மானங்களை எட்டுவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கும் நிலையில் குறைந்தது மூன்று தொடக்கம் ஆறு மாதகாலமேனும் தேவைப்படும் . ஆகவே அவ்வாறான நிலையொன்றை அடைவதற்கு அரசாங்கம் செயற்பாட்டில் இருக்க வேண்டும். தேர்தல் ஒன்றுக்கு நாம் செல்வதென்றால் மீண்டும் சில மாதங்கள் பிற்போக்கு. இன்றுள்ள நிலையில் நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பிற்போட முடியாது. அவ்வாறு செல்லும் வேளையில் மேலும் நெருக்கடிக்குள் வீழ்வோம். ஆனால் எந்த வழிமுறையிலேனும் முதலில் உறுதியான அரசாங்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

சர்வதேச தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வேளையில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் இப்போது நாம் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்ற போதிலும் அது தொழிநுட்ப மட்டத்திலான பேச்சுவார்தைகளாக அமைந்துள்ளது, அடுத்ததாக கொள்கை ரீதியிலான இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கமே பிரதான வகிபாகத்தை கொண்டுள்ளது. அதன்போது அரசின் முக்கிய சில நிறுவனங்கள் இயங்கியாக வேண்டும். . ஜனாதிபதி உள்ளிட்ட சகல அரசியல் தலைவர்களும் நிலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இல்லையேல் சகலரும் பொறுப்பு கூறியாக வேண்டும் என்றார்.



’ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்’ !! (வீடியோ)

பிரதமர் பதவி; பொன்சேகாவுக்கும் அழைப்பு !! (வீடியோ)

சஜித் தாக்கப்பட்ட போதிலும் அனுர ஏன் தாக்கப்படவில்லை ? (வீடியோ)

சில அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் – அத்துரலியே ரத்ன தேரர்!! (வீடியோ)

முப்படைகளினுடைய தளபதி ஜனாதிபதியே எதற்காக நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும் ? – இராணுவ தளபதி!!

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வௌியான செய்தி!! (வீடியோ)

ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமர் !! (வீடியோ)

’தேவைப்பட்டால் சுடுவோம்’ !! (வீடியோ)

அடுத்த பிரதமர் யார்? – 6 மாதங்களுக்குள் தேர்தல் (வீடியோ)

வன்முறைக்கு ஆள்சேர்த்த ’அட்மின்கள்’ குறித்து விசாரணை!! (வீடியோ)

முன்னாள் பிரதமரை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் குழு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !! (வீடியோ)

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !! (வீடியோ)

மஹிந்த அங்குதான் இருக்கிறார்: கமல் !!! (வீடியோ)

பதவி விலகுவதாக எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய வங்கி ஆளுனர் (நேரலை)

மூன்று அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்!! (வீடியோ)

இந்தியா படைகள் இலங்கைக்கு? (வீடியோ)

மஹிந்தவை ஜனாதிபதியாக்குக ; அநுர !! (வீடியோ)

நாட்டை பொறுப்பேற்கத் தயார்! (வீடியோ)

ஜனாதிபதி பதவி விலகினால் சஜித் பிரதமராவார் !! (வீடியோ)

“பேச்சுவார்த்தைகள் தொடரும்” !! (வீடியோ)

’யானை தன் தலையில் மண்ணை போட்டுக்கொண்டது’ !! (வீடியோ)

நாட்டிற்கு சேவையாற்றத் தயார்: கரு !! (வீடியோ)

’பொலிஸாரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை’ !! (வீடியோ)

ஜீவனின் கருத்தை வரவேற்றார் சுமந்திரன் !! (வீடியோ)

’கட்சித் தலைவர் கூட்டம் இணைய வழியில்’ !! (வீடியோ)

ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் நிலை – புத்திஜீவிகள் நம்பிக்கை!! (வீடியோ)

இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் – ஜனாதிபதி அழைப்பு!! (வீடியோ)

எந்த அரசியல் பிரமுகரும் இந்தியாவுக்கு தப்பியோடவில்லை – இந்திய உயர்ஸ்தானிகராலயம்!! (வீடியோ)

பா.உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்!! (வீடியோ)

பொலிஸ் ஜீப்பை கொளுத்த முயற்சி !! (வீடியோ)

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர் உயிரிழப்பு ! – 88 வாகனங்கள், 103 வீடுகளுக்கு சேதம்!! (வீடியோ)

துப்பாக்கிச் சூடு – நால்வர் காயம்!! (வீடியோ)

ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு!! (வீடியோ)

நீர்கொழும்பில் பதற்றம்: வீடுகள் மீது தாக்குதல் !! (வீடியோ)

டி.ஏ. ராஜபக்ஷவின் சிலை இழுத்து வீழ்த்தப்பட்டது !! (வீடியோ)

மக்களின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவிப்பு !! (வீடியோ)

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்!! (வீடியோ)

வன்முறைகளுக்கு ஐ.நா கண்டனம்!! (வீடியோ)

’ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் அப்பா’ !! (வீடியோ)

மல்வானை அதிசொகுசு வீட்டுக்கு தீ வைப்பு !! (வீடியோ)

கங்காராமவில் துப்பாக்கிச் சூடு: பதற்றம்!! (வீடியோ)

காலி முகத்திடல் வன்முறைகளில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? (வீடியோ)

இந்திய ஊடகம் வெளியிட்ட புகைப்படம் !! (வீடியோ)

58 கைதிகள் காணாமல் போயுள்ளனர் !! (வீடியோ)

மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை !! (வீடியோ)

ராஜபக்ஷ குடும்பம் தஞ்சம்; திருமலையில் பதட்டம் !! (வீடியோ)

மஹிந்த வெளிநாட்டுக்குப் பயணம்? (வீடியோ)

வருகைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் !! (வீடியோ)

இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம்; சந்திரிக்க எச்சரிக்கை !! (வீடியோ)

பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிக்கு அழைப்பு !! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.