;
Athirady Tamil News

ஊரை காலி செய்து எங்கு சென்றனர் என்று தெரியவில்லை- கிராமத்தில் வசித்த மக்களை தேடி அலையும் அதிகாரிகள்..!!

0

ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டம், தொங்கலமரி சீதா ராமபுரம் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். அந்த ஊரின் சாலை ஓரங்களில் ஏராளமான ஆலமரங்கள் உள்ளன. இந்த ஊரில் வசித்து வந்தவர்கள் திருட்டு தொழிலையே பிரதானமாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஆலமரத்தில் பதுங்கி இருந்து அந்த வழியாக வருபவர்களை தாக்கி அவர்களிடமிருந்து நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு கொள்ளையடித்த பொருட்களை ஆலமர பொந்துகளில் பதுக்கி வைப்பது வழக்கம். இந்த நிலையில் அங்கு வசித்து வந்த கிராம மக்கள் திடீரென காணாமல் போயினர். வீடுகள் மட்டும் அப்படியே உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் தொங்கல மரி சீதாராமபுரம் 1540 எண் கொண்ட வருவாய் துறை கிராமத்தில், 1 முதல் 63 சர்வே எண்ணில் 645 ஏக்கர் பரப்பளவு உள்ளது.இங்கு 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். அங்கு வசித்து வந்த மக்களுக்கு விஜய நகர பேரரசு குடும்பத்தினர் அந்த நிலங்களை இலவசமாக வழங்கியதாக பதிவேட்டில் உள்ளது. மேலும் விஜயநகர பேரரசுக்கு பின்னர் 1957-ம் ஆண்டில் ஆச்சார்யா வினோபாபா கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் 1989-90 ஆம் ஆண்டு விஜயநகர பேரரசு குடும்பத்தினர் வழங்கிய இலவச பட்டாக்களை ஆந்திர மாநில அரசு ரத்து செய்தது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் திடீரென மாயமாகினர். அவர்கள் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் என யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. அங்கு வசித்து வந்த கிராம மக்களை தேடி வருகின்றனர். பக்கத்து கிராமங்களில் விசாரணை நடத்தி தெரிந்தவர்களிடம் தகவல் சேகரித்து வருகின்றனர். ஊர் நுழைவு வாயிலில் ஊரின் பெயர் பலகை உள்ளது. கிராமத்தில் வீடுகள் உள்ளன‌. ஆனால் ஆட்கள் மட்டும் இல்லை. அங்குள்ளவர்கள் திடீரென காணாமல் போன சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த கிராம மக்கள் சந்ததிகள் உருவான பிறகு மனம் திருந்தி தொழிலை தேடி வேறு பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.