;
Athirady Tamil News

குஷ்புவின் நட் ‘பூ’!!

0

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்த போதும் சரி, காங்கிரசில் இருந்த போதும் சரி,நல்ல நட்பு வட்டாரத்தை சம்பாதித்து வைத்துள்ளார். அவ்வப்போது அவர்கள் பேசிக் கொள்ளவும் தவறுவதில்லை. அரசியலை கடந்து மணப்பது நட்’பூ’ என்பார் குஷ்பு. அந்த வகையில் 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து குஷ்பு சென்னைக்கு புறப்பட்ட போது அவரது பக்கத்து இருக்கையில் தி.மு.க எம்.பி. திருச்சி சிவா இருந்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் சந்தித்ததால் தங்கள் நட்பை பரிமாறி பேசிக்கொண்டனர். இருவரும் விமானத்தில் பயணித்ததை செல்பி எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். பழைய நண்பர்களை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி. தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா அவர்கள் உங்களை பார்ப்பது மிகவும் அற்புதம் என்று பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.