காஞ்சி மடாதிபதி திருமலையில் சுவாமி தரிசனம்!!

காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பதி ஏழுமலையானை நேற்று காலை தரிசனம் செய்தார். இவருக்கு கோயில் முகப்பு கோபுர வாசலில் முறைப்படி திருப்பதி தேவஸ்தானத்தினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், விஜயேந்திர சுவாமிகள், ஏழுமலையானின் வெஞ்சாமரை சேவையில் பங்கேற்று சேவையாற்றினார். அப்போது, தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி கோயில் பேஷ்கர் ஸ்ரீஹரி, கோயில் துணை அதிகாரி லோகநாதம் மற்றும் வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.