‘பாராளுமன்றம் தீ வைக்கப்படும் என அச்சம்’ !!

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டது தொடர்பில் பொதுமக்களின் கோபம் காரணமாக பாராளுமன்றம் எரிக்கப்படலாம் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத் தலைவர் வசந்த முதலிகே அச்சம் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தை 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.