;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைவஸ்து கலந்த மாவா பாக்குடன் இளைஞர் ஒருவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைவஸ்து கலந்த மாவா பாக்குடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக மாவா பாக்குடன் இளைஞன் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இளைஞனின் உடைமையில் இருந்து 100 கிராம் மாவா பாக்கு மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.