;
Athirady Tamil News

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கொரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

0

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் புதியதாக 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கடந்த ஜனவரி முதல் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,228 ஆக உயர்ந்துள்ளதாக நேற்று (ஜூன் 19) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவுக்கு சங்கிலி மாவட்டத்தின் மிராஜ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், கரோனாவால் பலியானோரது எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

அம்மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் 23,923 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தற்போது வரை 1,807 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.