தையிட்டி விகாரையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்: பொலிஸார் குவிப்பு
சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் தற்போதும் இடம்பெற்று வருகின்றது.
இன்றைய தினம் போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் என பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






