;
Athirady Tamil News

செம்மணியில் இரு என்புகூட்டிற்கு மேலாக ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது

0

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு பெரிய என்புக்கூட்டு தொகுகளின் முழங்கால் பகுதிக்கு குறுக்காக ஒப்பிட்டளவில் சிறிய எலும்புக்கூட்டு தொகுதியும் மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நான்கு என்புக்கூட்டு தொகுதிகளையும் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை நாளைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறாக கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போதும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று தடவைகள் ஒன்றன் மேல் ஒன்றாக என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் இந்த என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.