;
Athirady Tamil News

அடிக்கடி மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

0

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் மணிக்கு 30–40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் மற்றும் காற்று காரணமாக ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.