;
Athirady Tamil News

பாடசாலை வேனும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

0

கண்டி – மாத்தளை வீதி, அம்பதென்னை பகுதியில் திங்கட்கிழமை (15) நண்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்தபோது, பாடசாலை வேனில் சுமார் 20 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாகக் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.