;
Athirady Tamil News

1500 கிலோ வாகனத்தை காதில் கட்டி இழுத்த யாழ் நபர்!

0

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வத்தால் யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் சாகச நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

முதியோர் இல்ல வளாகத்தில் 1500 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 50 மீற்றர் தூரம் தனது காதில் கட்டி இழுத்து முதியோர் இல்ல முதியவர்களை இன்று (06) காலை மகிழ்வித்திருந்தார்.

62வயதான மட்டுவிலைச் சேர்ந்த செ.திருச்செல்வம் 5 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

அவர் தனது தாடி,தலை முடி,காது,உடல் ஆகியவற்றில் கனரக வாகனங்களைக் கட்டி இழுத்து சோழன் மற்றும் கலாம் உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.