லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்)
லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்)
#########################
புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களது பிறந்தநாளை அவரது மனைவி மீரா பிள்ளைகள் கோபி, தேனு ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கமைவாக இன்று வவுனியா எல்லைக் கிராமத்தில் நடைபெற்றது.
அக்கிராமத்தில் வாழும் சிறுவர் சிறுமிகளோடு பெற்றோர்களும் கலந்து கொண்டு லண்டன் வாழ் யோகி என அழைக்கப்படும் யோகலிங்கம் அவர்களை வாழ்த்திச் சென்றனர்..
குறித்த நேரத்தில் பிறந்த நாள் நிகழ்வு ஆரம்பிக்க கலந்து கொண்ட அனைவரும் பிறந்த நாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி தமது வாழ்த்துக்களை தெரிவிக்க அனைவருக்கும் கற்றல் உபகரணமாக மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது.
லண்டனில் வசிக்கும் பாபு அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியா மணிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள சுந்தரபுரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக மாணவர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பெற்றோர்கள் கலந்து கொண்டு லண்டனில் வசிக்கும் பாபு அவர்களின் சார்பாக மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
வவுனியா சுந்தரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் இராஜகுமார் ராஜேந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இன்றைய நாளில் பிறந்த நாளினை கொண்டாடும் யோகி அவர்கள் தேசியத்தின்பால் தீவிர பற்றுக்கொண்டு, பல்வேறு சமூகப் பணிகளை முன்னின்று செய்பவர். புலம்பெயர் தேசமான லண்டனில் தாயக உறவுகளுக்கு ஏற்படும் வதிவிட பிரச்சினைகள் தொடக்கம் சட்ட சிக்கல்கள் வரை இவரின் அரசியல், சமூக பங்களிப்பு ஆளுமைகளினால் நிவர்த்தி செய்து உதவி புரிந்து வருபவர்.
இவ்வாறான சமூக நோக்குடன் செயல்படுபவரை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர் இன்றைய நாளில் வாழ்த்தி கௌரவித்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
அதேவேளை இன்றைய நிகழ்வுகளில் நிதிப் பங்களிப்பு தந்த யோகி மீரா தம்பதிகளின் பிள்ளைகளுக்கும் தாயக உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவிக்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
20.10.2025
லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ)





























“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos