;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1814930.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் கையை கடித்த தவெக தொண்டர்

0

கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, தவெக தொண்டர் ஒருவர் பொலிஸாரின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரின் கையை கடித்த தவெக தொண்டர்
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை அகற்றக்கோரி தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் உள்ள தவெகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்துள்ள நிலையில் இதனையும் மீறி தவெகவினர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட முயன்றுள்ளனர்.

அப்போது பலரும் ஏறிகுதித்து மனமகிழ் மன்றம் உள்ளே செல்ல முயன்ற நிலையில் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது அங்கு தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த காவலர் ஒருவரின் கையை தவெக தொண்டர் ஒருவர் கடித்தார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.