;
Athirady Tamil News

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

0

சீனாவின், தன்னாட்சிப் பகுதியாக அறியப்படும் திபெத்தில் நேற்று (டிச. 25) ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தில், நேற்று மதியம் 12.04 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திபெத்தின் மற்றொரு பகுதியில், நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் மதியம் 1.07 மணியளவில், 4.1 ரிக்டர் அளவிலான புதியதொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்களால், நல்வாய்ப்பாக உயிர் மற்றும் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நிலநடுக்கங்களின் பின்அதிர்வுகள் உருவாக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக, திபெத்தில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.