மூன்று வாகனங்கள் மீதி விபத்து; ஒருவர் பலி..10 பேர் காயம்
கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) பிற்பகல் இரண்டு பேருந்துகளும் ஒரு டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த பயணிகளும் உள்ளடங்களாக 10 பேர் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.