;
Athirady Tamil News

இலங்கையில் மாற்றம் காணாத தங்கம் விலை!

0

நாட்டில் கடந்த சனிக்கிழமையுடன் (10) ஒப்பிடுகையில், நேற்றுவரை (12) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்தது.

இந்நிலையில், இன்று (13) இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு நகையக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று தங்க விலை நிலவரம்
அந்தவகையில், இலங்கையில் இன்று தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.