;
Athirady Tamil News

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் – வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

0

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் , அவற்றினை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்வரும் , 09ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதன் போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் 09ஆம் திகதி வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது என்றும் , அன்றைய தினம் அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.