;
Athirady Tamil News

பிரபல சிங்கள நடிகர் ஹேமல் ரணசிங்க கைது

0

நபரொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நடிகர் ஹேமல் ரணசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஹேமால் ரணசிங்க வெள்ளவத்தை பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (3) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹேமால் ரணசிங்க இன்று காலை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகிய போதே பொலிஸாரால்கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

நடிகர் ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு
நபரொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று காலை கைதுசெய்யப்பட்ட நடிகர் ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தலா ரூ. 100,000 சரீரப் பிணையில் விடுவிக்க கல்கிஸ்ஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு மே மாதம் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.