;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரிபால சிறிசேன தலை தப்பியது!

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளை பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் இடம்பெற்ற குற்றவியல் ரீதியான கொலை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மைத்திரிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

மைத்திரிக்கு அழைப்பாணை
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய ஐந்து பேர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை அறிவித்தது.

அதேசமயம் , புதிய சாட்சியங்கள் ஏதேனும் முன்வைக்கப்படும் பட்சத்தில், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறித்த வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக அமையாது என்றும் நீதியரசர்கள் ஆயம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.