;
Athirady Tamil News

இடி மின்னல்…மழை ;வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை!

0

நாட்டில் இன்று (07) நண்பகல் 12.00 மணியளவில் கடும் மின்னல் தாக்கம் தொடர்பான ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கையைவளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது,

வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை
பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது மூடிய அறைகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும். நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்த வெளிகளில் இருப்பதைத் தவிர்க்கவும்.

இடி முழக்கத்தின் போது கம்பித் தொடர்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்னிணைப்பில் உள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். துவிச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

பலத்த காற்றினால் விழக்கூடிய மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.