;
Athirady Tamil News

இதுதான் அமெரிக்காவின் மீட்பு : மாணவிகளை புதைக்க தோண்டிய குழிகளை பகிர்ந்துள்ள ஈரான்: நெஞ்சை உருக வைக்கும் பதிவு

0

தெற்கு ஈரானின் மினாப் நகரில் செயல்பட்டு வந்த ஷஜரே தையேபா (Shajareh Tayyebeh) என்ற பெண்கள் ஆரம்பப் பள்ளிமீது கடந்த சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்.

இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 165 முதல் 180 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மாணவிகளை புதைக்க தோண்டப்பட்ட குழிகளின் புகைப்படங்கள்
இந்த தாக்குதலில் இறந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை புதைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளின் புகைப்படங்களை ஈரான் பகிர்ந்துள்ளது. இது இன்னும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ்டர் ட்ரம்ப் வாக்களித்த ‘மீட்பு’
இந்தப் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், “அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒரு தொடக்கப்பள்ளியில் கொல்லப்பட்ட 160-க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுமிகளுக்காக தோண்டப்பட்ட கல்லறைகள். அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ளன

மிஸ்டர் ட்ரம்ப் வாக்களித்த ‘மீட்பு’ (rescue) என்பது நிஜத்தில் இப்படித்தான் இருக்கிறது. காசா முதல் மீனாப் (Minab) வரை, அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.