;
Athirady Tamil News

மத்திய கிழக்கு போரில் திருப்பம் ; ட்ரம்பின் அதிரடி அறிவிப்பால் உலகிற்கு சிக்கல்

0

ஈரானில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானில் அமெரிக்காவின் ராணுவ இலக்குகளை அடைவதற்கு “மிகவும் நெருக்கமான” நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அச்சுறுத்தல்
இதனால், இராணுவ நடவடிக்கைகளை விரைவில் “குறைத்துக்கொள்ள” அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா பயன்படுத்துவதில்லை என்றும், அதன் பாதுகாப்பிற்கு அந்தப் பாதையைச் சார்ந்துள்ள நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதிலும் கண்காணிப்பதிலும் பிற நாடுகள் முன்னின்று செயல்பட வேண்டும். ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு, அமெரிக்காவின் உதவி அங்குத் தேவைப்படாது என அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் மற்ற நாடுகள் உதவி கோரினால் மட்டுமே அமெரிக்கா அங்குத் தனது பங்களிப்பை வழங்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கனவே 90வீதமளவில் சிதைக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா உரிமை கோரி வரும் நிலையில், இந்தப் போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.