;
Athirady Tamil News

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்

0

நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி புதன்கிழமை  இடம்பெறவுள்ளது.
 
இன்று(25) அதிகாலை கர்மாரம்பக் கிரியைகள் ஆரம்பமானது. தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள் இடம்பெற்று , எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 6 மணி முதல் 30 ஆம் திகதி மாலை 6 மணிவரை  அடியவர்கள்   எண்ணெய் காப்பு சாத்தும்  நிகழ்வுகள்  இடம்பெறும்.    

அதனை தொடர்ந்து  ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.50 மணி முதல் 11 மணிவரையுள்ள  சுப நேரத்தில்  மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.


படங்கள் – ஐ. சிவசாந்தன்


 
You might also like

Leave A Reply

Your email address will not be published.