;
Athirady Tamil News

மேற்காசியாவில் உள்ள அமெரிக்க-இஸ்ரேல் பல்கலைக்கழகங்கள் மீது தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை

0

தெஹ்ரான்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் உள்பட ஈரானிய பல்கலைக்கழகங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சமீபத்திய தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று ஈரான் இஸ்லாமிய காவல் படை தெரிவித்துள்ளது.

இதனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் உள்ள தொடர்புடைய அனைத்து பல்கலைக்கழகங்கள் மீதும் நாங்கள் தாக்குதல் நடத்துவோம். அந்த பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பல்கலைக்கழக வளாகங்கள் அருகே உள்ள பணியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் குறைந்தது ஒரு கி.மீ. தொலைவுக்கு விலகி இருங்கள் என்றும் எச்சரித்து உள்ளது.

இந்த தாக்குதல் நடத்தப்பட கூடாது என விரும்பினால், ஈரான் மீது நடத்திய இந்த தாக்குதல்களுக்கு நாளை (திங்கட்கிழமை) நண்பகலுக்குள் அமெரிக்க அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.