;
Athirady Tamil News

பாடசாலையில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபம்

0

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்களைத் தவிர்ந்த, 2 ஆம் தரம் முதல் 11 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது தொடர்பான புதிய சுற்றுநிருப அறிவுறுத்தல்களை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைய, ஒரு வகுப்பறையில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையை உரிய மட்டத்தில் பேணுவதையும், மாணவர் சேர்க்கை நடைமுறையை முறைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில் நிலவும் முறைகேடுகள்
மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏற்கனவே 2025.09.09 அன்று வெளியிடப்பட்ட 27/2025 இலக்க சுற்றுநிருபத்தை நடைமுறைப்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையிலேயே தற்போதைய புதிய அறிவுறுத்தல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை தனது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 2, 3, 4, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான புதிய வழிகாட்டல்கள் விரைவில் கல்வி அமைச்சினால் வெளியிடப்படவுள்ளன.

இந்த புதிய நடைமுறை மூலம் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில் நிலவும் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலை சுற்றுப்புறப் பாதுகாப்பு மற்றும் ஒழுக்க விதிகளை மீறுவோர் மீது காவல்துறையினர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவதைப் போன்று, கல்வித் துறையிலும் இவ்வாறான சட்டதிட்டங்கள் முறையாகப் பேணப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.