;
Athirady Tamil News

லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

0

நாட்டிற்கு சொந்தமான 42,000 மெற்றிக் தொன் எரிவாயு கையிருப்பு மாலைத்தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கையிருப்பை விரைவில் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது என்றும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மே மாதத்திற்குத் தேவையான 33,000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏந்திய கப்பல் ஒன்று ஏப்ரல் 25ஆம் திகதி இலங்கைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இலங்கை செய்திகள் இதேவேளை, 7,000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏந்திய கப்பல் ஒன்று ஏப்ரல் மாதம் 04திகதி நாட்டை வந்தடையும் என லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.