நுவரெலியாவில் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை; மக்கள் மகிழ்ச்சி
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. நீண்டகால வறண்ட வானிலை மற்றும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இது பெரும் நிம்மதியை அளித்தது.
அதேவேளை லபுகெலே பகுதியில், ஒரு யூகலிப்டஸ் மரத்திற்கு அருகே நடந்து சென்றுகொண்டிருந்த மூன்று நபர்கள் மீது மின்னல் தாக்கியதில், அவர்கள் லேசான காயங்களுக்கு உள்ளாயினர்.
இந்த வறண்ட வானிலை, காய்கறி மற்றும் தேயிலைப் பயிர்ச்செய்கைகளைப் பாதித்ததுடன், குடிநீர்ப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திடீரென கொட்டித்தீர்த்த மழையால் நுவரெலியா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
