;
Athirady Tamil News

நாட்டில் இன்றும் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு

0

ஹோமகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று(06) 12 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

பாதுக்க மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள நீர் விநியோகத் தடை இன்று காலை 8:00 மணிக்கு முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளது.

நீர் விநியோகத் தடை
அதன்படி, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 12 மணி நேர நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும்.

தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகளே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் சுகாதார வாரியம் (NWSDB) தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.