;
Athirady Tamil News

துருக்கியில் இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் முயற்சி: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

0

அங்காரா,

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்-இல் இஸ்ரேல் நாட்டின் தூதரகம் உள்ளது. இஸ்தான்புல் நகரின் பிசிக்டஸ் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 7வது மாடியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது.

இந்த தூதரகம் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு இன்று காரில் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் வந்துள்ளனர்.

3 பயங்கரவாதிகளும் காரில் இருந்து இறங்கி இஸ்ரேல் தூதரகத்திற்குள் சென்று தாக்குதல் நடத்த முற்பட்டனர். அப்போது, தூதரகம் அருகே பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார், 3 பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர். இந்த மோதலில் 2 போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.