;
Athirady Tamil News

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின்  சடலம் உறவினர்களிடம் கையளிப்பு(video/photoes)

0

video- https://fromsmash.com/i~H1EW..W1-dt

தனது வீட்டு முற்றத்தில் வைத்து   யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை    பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   மஜீத்புரம்  பிரதேசத்தில்  உள்ள வீடொன்றில்  புதன்கிழமை (8)  அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன்  யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர்  மதியம்  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பகுதி மஜீத்புரம் மல்வத்தை-03 முகவரியைச்  சேர்ந்த  மூன்று பிள்ளைகளின் தயான   48  வயது மதிக்கத்தக்க அபூபக்கர்  சபீனா பேகம்  என்ற  குடும்ப பெண்  சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.

மேலும்    சம்மாந்துறை நீதிமன்ற பதில்  நீதிவான் திருமதி எம்.எம். பாத்திமா சாமிலா  கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர யானை தாக்கி உயிரிழந்த குடும்ப பெண் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு காலில் முறிவு ஏற்பட்டிருந்ததுடன்  அப்பெண்ணின் வீட்டின் அருகில் யானைகள் தொகையாக வழி மாறி செல்லும் இடமாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில்  சம்மாந்துறை பிரதேசத்தில்  யானை தாக்குதலுக்கு இலக்காகி  பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது   யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

   
You might also like

Leave A Reply

Your email address will not be published.