மன்னார் கடலில் இரு படகுகள் மோதியதில் மீனவர் உயிரிழப்பு
மன்னார் கடல் பகுதியில் இன்று (15) இரு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனபோது விபத்தில் படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.
சம்பவத்தில் கடலில் காணாமல் போயிருந்த மீனவர் நீண்ட நேர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மீனவரின் உடல் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளடன், காயமடைந்த மற்றொரு மீனவர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேர்கொண்டு வருகின்றனர்.