;
Athirady Tamil News

சாக்கு மூட்டைக்குள் கண்டெடுக்கப்பட்ட உடல்: அதிர்ச்சிப் பின்னணி

0

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் சாக்கு மூட்டை ஒன்றிற்குள் ஆண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது.

பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சாக்கு மூட்டைக்குள் கண்டெடுக்கப்பட்ட உடல்
ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி, புதுடெல்லியிலுள்ள மோதி நகர் என்னுமிடத்தில், மெத்தை, போர்வைகளுக்குள் மறைத்துவைக்கப்பட்டு சாக்கு மூட்டை ஒன்றிற்குள் அடைக்கப்பட்ட ஆண் ஒருவரின் உயிரற்ற உடல் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த உடல் உடற்கூறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, அந்த நபர் கடுமையாக தாக்கப்பட்டு, கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.

முக்கிய தடயம்
உடற்கூறு ஆய்வின்போது, அந்த நபரின் அழுகிய தோலுக்கு அடியில், அவரது வலது கையில் அமித் – கிரண் என்னும் பெயர் டாட்டூவாக பொறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

300க்கும் மேற்பட்ட சிசிடிவி கமெராக்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அந்த நபரின் உடலை சுற்றியிருந்த மெத்தை, போர்வைகள் என அனைத்தும் ஒரு குறிப்பிட்ட முகவரியை நோக்கி கைநீட்ட, அந்த முகவரியை அடைந்துள்ளனர் பொலிசார்.

கொல்லப்பட்ட நபர் பெயர் அமித் குமார் என்பதும், அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் இப்போது அமித்தின் தம்பியான கோபாலும் அவரது மனைவியான சோமாவும் தங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால், அமித் கொல்லப்பட்டதும் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டார்கள்.

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்கள்
இந்நிலையில், நேற்று முன் தினம், Shiv Basti என்னுமிடத்தில், ரயில் பாதை ஒன்றின் அருகில் பதுங்கியிருந்த கோபாலும் சோமாவும் பொலிசில் சிக்கியுள்ளார்கள்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்லப்பட்ட அமித், தன் தம்பியின் மனைவியான சோமாவை மோசமாக நடத்தியுள்ளார். அவரை தன் மனைவி போல வேலைவாங்குவதும் அதிகாரம் செய்வதுமாக இருந்ததுடன், அவரிடம் உடல் ரீதியாகவும் தவறான உறவு கொள்ளவும் முயன்றுள்ளார் அமித்.

அதனால் குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட, அமித்தின் தொல்லைகள் தொடர, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கோபாலும் சோமாவும் ஒரு கட்டத்தில் அமித்துடைய தொல்லை தாங்க முடியாமல் அவரை கொலை செய்துவிட்டார்கள். பொலிசார் இந்த வழக்கு தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.