வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத், நேற்றைய தினம் (16.06.2026) யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள தாராக்குளம் குடியிருப்புக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டு, அங்குள்ள மக்களுடன் கலந்துரையதுடன், அம் மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
பிரதி அமைச்சர் அவர்களின் களவிஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ்.கபிலன், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சிவகாமி உமாகாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.