ஹோர்முஸ் நீரிணை திறப்பால் உலக வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் ; ட்ரம்ப் வலியுறுத்தல்
ஈரான் மீதான ஆயுத விநியோகத்தை நிறுத்த சீனா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறப்பதன் மூலம் சீனா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக நாடுகளும் பயனடையும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்று சீனா உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் சீனாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது அந்த நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் சுமுகமான சந்திப்பு இடம்பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
போரிடுவதை விட இராஜதந்திர ரீதியில் இணக்கப்பாடுகளை எட்டுவது சிறந்தது.
எனினும், தேவை ஏற்படும் பட்சத்தில் தற்காப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் அமெரிக்கா மற்ற நாடுகளை விட மிக வலிமையாக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.