;
Athirady Tamil News

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்: ஈரானுக்கு சீனா வலியுறுத்தல்

0

ஈரான் – அமெரிக்கா போரால் ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு சீனா ஆதரவாக இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பெரிதாக எதையும் சீனா கூறாமல் இருந்தது.

இந்த நிலையில், முதல் முறையாக ஈரானுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை சீனா வைத்துள்ளது. அதாவது, ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல்களின் பாதுகாப்பையும், தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் அரசுக்கு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் உரையாடிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.