;
Athirady Tamil News

யாழில். தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

0

தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.