சுமந்திரனின் தவறான ஆட்சேபனை – வழக்கு செலவாக 10ஆயிரம் செலுத்த உத்தரவு ; மேன்முறையீடு செய்யவுள்ள சுமந்திரன்.
;
அதனை குறித்த உறுப்பினர் சவாலுக்கு உட்படுத்தி, சுமந்திரன் தன்னை எந்த அடிப்படையுமற்ற மத்தியக்குழுவி
வழக்கு விசாரணைகளின் போது மன்றில் தோன்றிய தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வீ கே சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையினை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர்.
அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தமிழரசுக் கட்சியின் தலைவராலும் செயலாளராலும் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் தவறானது எனக் கூறி தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தலா பத்தாயிரம் ரூபாயை குறித்த ஆட்சேபனையை எழுப்பியதற்கான வழக்குச் செலவாக செலுத்த வேண்டுமென கட்டளையிட்டுள்ளது.
அதனை அடுத்து வழக்கினை ஜூலை மாதம் 07ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.