;
Athirady Tamil News

பிரான்சில் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு சிகிச்சை

0

பாரீஸ்,

உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எலிகள் மூலம் பரவக்கூடிய மோசமான தொற்று ஆகும். அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்கா, ஸ்பெயின், அன்டார்டிகா உள்ளிட்ட நாடுகளுக்கு எம்வி ஹோண்டியஸ் என்ற சொகுசு கப்பல் சுற்றுலா சென்றது. இந்த பயணம் செய்த பயணிகளிடையே ஹண்டா வைரஸ் பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது.

நெதர்லாந்து தம்பதி உள்பட 3 பேர் இந்த பாதிப்புக்குள்ளாகி கப்பலிலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து கனாரி தீவு அருகே அந்த கப்பல் நிறுத்தப்பட்டு அதில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் தங்களது சொந்த நாடுகளில் 42 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 11 பேர் ஹன்டா வைரசால் பாதிக்கப்பட்டநிலையில் அவர்கள் பாரீஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு பெண் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.