யாழ்ப்பாணம் அச்சுவேலியில் அதிகூடிய மழைவீழ்ச்சி!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அச்சுவேலிப் பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இக் காலப்பகுதியில் 90.8 மில்லி மீற்றர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் உள்ள சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 20 பெரிய நீர்த்தேக்கங்களும் 19 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் இன்னும் நிரம்பி வழிகின்றன என்று நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.