;
Athirady Tamil News

எவரெஸ்ட் சிகரத்தை 32-வது முறையாக ஏறி உலக சாதனை படைத்த நபர்

0

காத்மாண்டு,

உலகின் மிக உயரமான சிகரமாக எவரெஸ்ட் உள்ளது. நேபாளத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள இந்த சிகரம் 8,849 மீட்டர் (29,032 அடி) உயரம் கொண்டது. நேபாளத்தில் புகழ் பெற்ற மலையேற்ற வீரராக காமிரிடா ஷெர்பா (வயது 51) உள்ளார். இவர் எவரெஸ்ட் சிகரத்தை தனது வாழ்நாளில் 31 முறை ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அதிகமுறை அடைந்தவர் என்ற உலக சாத னையை தன்வசம் வைத்திருந்தார்.

இந்தநிலையில் காமி ரிடா எவரெஸ்ட் சிகரத்தை 32-வது முறையாக வெற்றிகரமாகச் ஏறினார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை அதிகமுறை ஏறிய நபர் என்ற தனது சொந்த உலக சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

எவரெஸ்ட் மட்டுமின்றி கே2 (இந்தியாவின் உயர்ந்த சிகரம்), சோ ஓயு. லோட்சே மற்றும் மனாஸ்லு உள்ளிட்ட 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள உலக சிகரங்களை 45-க்கும் மேற்பட்ட முறை கடந்துள்ளார். இந்த 32-வது சிகரப் பயணமே தனது கடைசி எவரெஸ்ட் பயணம் என்றும், ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.