;
Athirady Tamil News

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் ; வெளியான தகவல்

0

அரசாங்கம் வாகன இறக்குமதிகளுக்கு 50 வீத மேலதிக வரி விதித்ததையடுத்து நாட்டில் வாகன விலைகள் கணிசமாக உயரக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த புதிய வரி, நாணய மாற்று வீத உயர்வு மற்றும் ஏற்கனவே உள்ள வரிகள் சேர்ந்து வாகன மொடல்களுக்கு ஏற்ப 15 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபா வரை விலை உயர்வு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறிய ரக, நடுத்தர மற்றும் அதிநவீன SUV வாகனங்களின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாம் என தொழில்துறை தரப்புகள் தெரிவித்துள்ளன.

இது முழுமையாக நுகர்வோருக்கு கூடுதல் சுமையாக மாறும் நிலை உருவாகும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.