;
Athirady Tamil News

டிரம்ப் போல் தோற்றமளிக்கும் எருமை: ஆர்வத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

0

இணையத்தில் சில விலங்குகள் அவற்றின் வித்தியாசமான தோற்றம் அல்லது தனித்துவமான குணாதிசயங்களால் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், வங்காளதேசத்தில் வளர்க்கப்படும் 2 எருமை மாடுகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் ஈர்த்துள்ளன. அவற்றின் தோற்றம் மட்டுமல்லாமல், சூட்டப்பட்டுள்ள பெயர்களும் நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் சுமார் 700 கிலோ எடை கொண்ட அல்பினோ வகை எருமை, வெளிர் நிற தோல் மற்றும் முடியால் தனித்துவமாக காணப்படுகிறது. குறிப்பாக அதன் தலைமுடி அமைப்பு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் சிகை அலங்காரத்தை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த எருமைக்கு ‘டொனால்டு டிரம்ப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ஜியாவுதீன் மிருதா கூறுகையில், “உருவத்தில் டிரம்பை போல இருந்தாலும், இந்த எருமை மிகவும் அமைதியானதும் சாதுவானதும் ஆகும்” என்று நகைச்சுவையாக தெரிவித்தார். இதேபோல், நாராயணகஞ்ச் பகுதியில் உள்ள மற்றொரு பண்ணையில் வளர்க்கப்படும் 750 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட எருமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த எருமை மிகவும் ஆக்ரோஷமான குணம் கொண்டதாகவும், குறும்புத்தனமாக நடந்து கொள்வதாகவும் பண்ணை மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு தந்திரமான புத்திசாலித்தனமும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த 2 எருமைகளையும் நேரில் காணவும், அவற்றுடன் செல்பி எடுக்கவும் ஏராளமான மக்கள் அந்த பண்ணைகளுக்கு திரண்டு வருகின்றனர். அவை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.