;
Athirady Tamil News

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்ட தகவல் புதுப்பித்தல் செயல்முறைக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

எனவே, அந்தத் திகதிக்கு முன்னர் தமது வீடுகளுக்கு வருகை தரும் கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களுக்கு சரியான தகவல்களை வழங்கி தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு நலன்புரி நன்மைகள் சபை சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தவறான அல்லது போலியான தகவல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அந்தச் சபை வலியுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.