;
Athirady Tamil News

‘பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது?’ – இன்ஸ்பெக்டருடன் த.வெ.க. எம்.எல்.ஏ. வாக்குவாதம்

0

சென்னை,

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தற்போது சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். அவரும், சென்னை சூளைமேடு பகு தியைச் சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அந்த வாலிபர், இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதுபற்றி இளம்பெண், அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். போலீசார், வாலிபரை கைது செய்து நீதிமன்ற ஜாமீனில் விடுவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலனுக்கு நேற்று வேறொரு பெண் ணுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் திருமணம் நடை பெற்றதையும், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதையும் அறிந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து தனது ஆதரவாளர்கள் சிலருடன் திருமண மண்டபத்துக்கு சென்ற இளம்பெண், தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய காதலனின் திருமணத்தை நிறுத்தக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். அப்போது இளம்பெண்ணுக்கு ஆதரவாக போலீஸ் நிலையம் வந்த கலில் அகமது என்பவரை இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி கையால் தாக்கி கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி அறிந்த ராயபுரம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. விஜய் தாமு. போலீஸ் நிலையம் சென்று. “உங்களுக்கு பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது?” என கேட்டு இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்தார்.

மேலும் இரு தரப்பையும் போலீஸ் நிலையம் அழைத்து வராமல், பணம் வாங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டும் அழைத்து வந்ததாக குற்றம்சாட்டியதுடன், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் அவரை ஏமாற்றிய வாலிபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை ஏன் மேற்கொள்ளவில்லை? எனவும் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

பதிலுக்கு இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி, இந்த வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது வேறொரு போலீஸ் நிலையம். ஆனால் இங்கு நடந்த திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்த முயன்றதால் அவரை அழைத்து வந்து எழுதி வாங்கிவிட்டு அனுப்பி விட்டதாகவும் கூறினார். இதனால் எம்.எல்.ஏ. மற்றும் இன்ஸ்பெக்டர் இடையே போலீஸ் நிலையத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வண்ணாரப் பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.