;
Athirady Tamil News

AI அபாயங்களை எதிர்கொள்ள பிரித்தானியா-அவுஸ்திரேலியா புதிய ஒப்பந்தம்

0

பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவும், வேகமாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு (AI) அபாயங்களை எதிர்கொள்ள புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், UK AI Security Institute மற்றும் Australian AI Safety Instiitute இணைந்து செயல்படவுள்ளன.

இரு நாடுகளும், AI பாதுகாப்பு மற்றும் சைபர் அபாயங்களை கண்காணித்து, ஆராய்ச்சி முடிவுகளைப் பகிர்ந்து, AI மதிப்பீட்டிற்கான சர்வதேச தரநிலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

AI தொழிலநுட்பம் வேகமாக முன்னேறி, சைபர் தாக்குதல்களை நடத்தும் திறன் அதிகரித்து வருவதால், இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், AI பாதுகாப்பு தொடர்பான தகவல் பரிமாற்றம், ஆராய்ச்சி ஒத்துழைப்பு, சிறந்த நடைமுகள் பகிர்வு மற்றும் பணியாளர் பரிமாற்றம் நடைபெறும்.

இதன்மூலம் AI தொழில்நுட்பம் பாதுகாப்பாகவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய இரு நாடுகளும் முயற்சி செய்கின்றன.

பிரித்தானியாவின் AI அமைச்சர் கனிஷ்கா நாராயண் மற்றும் அவுஸ்திரேலியாவின் டிஜிட்டல் பொருளாதார உதவி அமைச்சர் டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன், கான்பெர்ராவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

“AI வேகமாக வளர்கிறது. அதேபோல் அபாயங்களும் அதிகரிக்கின்றன. எந்த நாடும் இதை தனியாக சமாளிக்க முடியாது. நம்பகமான கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவது அவசியம்” என கனிஷ்கா நாராயண் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.