யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – மோசடிக்கு துணை போன உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை
;
குறித்த ஆதனமானது யாழ். மாநகர சபைக்கு உரித்தானது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நில அளவைத் திணைக்கள வரைபடங்கள் என்பன தம்மிடம் உள்ளமை தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் இதன்போது ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினர்.
விடயங்களை விரிவாக ஆராய்ந்த ஆளுநர், குறித்த ஆதனம் தொடர்பான சந்தேகத்துக்கிடமான பெயர்மாற்றம் மற்றும் வரி அறவீட்டு விடயங்களைக் கையாண்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைக் குழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
இந்த விசேட கள ஆய்வின்போது, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி முதல்வர், உரிய பிரிவின் கிராம அலுவலர் மற்றும் காணி அலுவலர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.