;
Athirady Tamil News

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – 12 பேர் பலி

0

பெரூட்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதேவேளை, இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர்.

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல்
இதனால், இஸ்ரேல் – ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், ஹிஸ்புல்லாவின் ஆயுதக்கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரும் இஸ்ரேல் மீது அவ்வப்போது டிரோன்கள், ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், லெபனானின் கிழக்கே பிஹா பள்ளத்தாக்கு பகுதியில் இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் எத்தனைபேர் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.