3,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
காலி பிரதேசத்தில் சுமார் 3,000 போதை மாத்திரைகள் மற்றும் 125,000 ரூபாய் பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சட்டவிரோத மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சோதனை நடவடிக்கையின்போது பொலிஸார் குறித்த மாத்திரைகளையும் பணத்தையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர் தனியார் மருந்தகம் ஒன்றில் பணிபுரிபவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சனிக்கிழமை (06) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். காலி பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.